சுதிக்கு கெடு கொடுத்து அனுப்பிய டைரக்டரான ராசாவின் மனசிலே அந்த ராசாத்தியின் நினைப்புத்தான் இருந்தது.”சீனியர் சிட்டிஸன்களுடன் சில்மிஷத்திற்குச் சம்மதிப்பதில்லை’ என்கிற சுதியின் பாலிஸி ஜெயித்தது.
அதன் பிறகு அந்த டைரக்டர் இருக்கும் திசைப்பக்கம் போகவில்லை.
“எஸ்’சுக்கு அடுத்த எழுத்தையும், “ஜே’வுக்கு அடுத்த எழுத்தையும் பெயருக்கு முன்னால் கொண்டு கிராமிய படங்களை எடுத்த டைரக்டரின் புதிய படத்தில் சான்ஸ் தேடிப்போனார்கள் சுதியும் மம்மியும். “சினிமா உலகமே இப்படித்தானம்மா இருக்குது. தப்புத்தண்டா பண்ணினாத் தான் அரிதாரம் பூச வாய்ப்பு கிடைக்கும்னு ஆகிப்போச்சு. வடக்குப் பக்கமிருந்து நடிக்க ஆசைப்பட்டு வர்றவுக, “அதுக்கும் தயார், எதுக்கும் தயார்’னு உத்திரவாதம் குடுத்திடுறாங்க.
தெக்கத்தி பொண் ணுங்க அம்புட்டு சீக்கிரம் படியிறதில்ல. அதனால தான் கோடம்பாக்கத்தில் நடிகைகள் விஷயத்தில் “வடக்கு வாழுது; தெற்கு தேயுது’… என திரை நடப்பு களை தெளிவாகப் பேசியவர்… “ஆனா ஒண்ணும்மா… நான் உங்க புள்ளைக்கி எந்த தொந்தரவும் தரமாட்டேன்’ என உறுதி கொடுத்தார். இப்படி ஆறுதல் வார்த்தை கள் பேசிய முதல் டைரக்டராக இவர் களின் அனுபவத்தில் தெரிந்தார் அந்த டைரக்டர்.
இதனால் அவரை தங்களின் குடும்ப நண்பராக ஏற்றுக்கொண் டார் சுதியின் அம்மா. அடிக்கடி அந்த டைரக்டரை சந்தித்து பேசி வந்தார்கள். ஆனால் அந்த டைரக்டர் ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் அந்தப் படத்திட்டத்தை தொடங்காமலே கைவிட்டுவிட்டார். நாட்கள் கடந்ததுதான் மிச்சம்.
தன் அட்ஜஸ்ட்மென்ட் பாலிஸியின் சில கடுமையான விதிகளை கைவிட்டார் சுதி. ஆனால் அது கை கொடுக்கவில்லை. பெரிய பெரிய வாய்ப்புகள் கதவைத் தட்டியபோது சுதி திறக்கவில்லை. கதவைத் திறந்து வைத்து இவர் காத்திருந்தபோது பெரிய வாய்ப்புகள் வரவில்லை.
அப்போது வளரும் நடிகராக இருந்த பிரசன்னத்திற்கு ஜோடியாக, இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக ஒரு வாய்ப்பு வந்தது. “லவ்-இணையதள முகவரி’ பெயரில் எடுக்கப்பட்டது அந்தப் படம். வெளிநாட்டுத் தமிழரான “சிவந்த வேள்’ படத்தைத் தயாரித்தார். பிசினஸ்மேனான அவருக்கு சினிமா தயாரிப்பு பிரதானமில்லை. நடிகைகளுடனான நட்பும், தனிச்சந்திப்பும் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் சம்திங் ஸ்பெஷல் என்பதால், படத்தைத் தயாரித்தார். அந்த தயாரிப்பாளரே “துறுதுறு’னு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டு போல் இருப்பார்.
இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது… சிவந்தவருடன் கலந்தார் சுதி. “நடிக்கிறதுக்கு சம்பளம்தான் கொடுத்தாச்சே…’ என்கிற கெடுபிடியெல்லாம் காட்டாமல்… தனிச் சந்திப்புகளுக்கு தாராளமாக தனித்தொகையை அள்ளிவிட்டார் தயாரிப்பாளர். இதனால் அடிக்கடி அளவளாவினார்கள்.
“சுதியின் பார்வை தன் பக்கம் திரும்பவில்லையே’ என ஹீரோவுக்கு ஏக்கம். “ஷூட்டிங் முடியும் வரை எனக்கு மட்டுமே’ என்பது தயாரிப்பாளரின் நோக்கம். இந்தக் கடுப்பில் வந்த கோபத்தை வேறு மாதிரியாக ஹீரோ வெளிக்காட்ட… ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மனக்கசப்புகள் கூட ஏற்பட்டன.
இந்தப் படம் சுமாரான வெற்றியையே பெற்றது. அடுத்தடுத்து கசமுசாக்களுக்கு உடன்பட்டு கிடைத்த வாய்ப்புகளும் சொல்லிக்கொள்கிறபடி இல்லை. “அது’க்கு இடம் கொடுத்தும் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்காத வருத்தத்தில் “சீச்சீ… சினிமாப் பழம் புளிக்குது’ என விலகிப் போனார். இப்போது சின்னத்திரை அள்ளிக்கொண்டது.
முதல் சீரியலில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார் சுதி. இருப்பினும் எடுத்த எடுப்பிலேயே தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.
நன்றி – நக்கீரன்
